தில்லையாடி பெரியநாயகி சமேத சரணாகத ரட்சகர் கோவில்

 தலவரலாறு :

    சோழ மன்னன் ஒருவன் திருக்கடையூர் கோவிலுக்கு நன்கொடை வழங்கி , புதுப்பித்து குடமுழுக்கு செய்யும் வரை , மந்திரியிடம் பார்த்து கொள்ளுமாறு கூறினார் .மந்திரி  தில்லையாடி சிவன் கோவிலையும்  புதுப்பித்தார் இதனை அறிந்த விக்ரம சோழ மன்னன் மந்திரியின் கைளை வெட்ட தன்னுடைய வாளை ஒங்க , சிவபெருமான் முன்னே தோன்றி மந்திரியை காக்க , அந்த ஒளி தாங்க முடியாமல் மன்னரின் கண் பார்வை பறி போனது .மன்னர் தில்லையாடி கோவில் வந்து ஈசனே வழிபட்டு மீண்டும் கண் பார்வை பெற்றரர். தன்னை நாடி வருபவர்களை காப்பதால் இவர் சார்ந்தாரைக் காத்த நாதர் கோயில் என அழைக்கப்படுகிறார் . 

பெருமாள் வழிபட்ட கோவில் 

    இரண்யட்சகன் என்ற அசுரனே கொன்றதால் வீர ஹத்தி தோஷம் ஏற்பட்டது .அதனை போக்க , திருமால் திருவீழிமலையில் சிவபெருமானே வழிபட்டு சக்கர  ஆயுதம் பெற்று தில்லைவனம் வந்தார் .திருமால் சக்கரா ஆயுதம் கொண்டு உருவாக்கிய தீர்த்தம் சக்கர தீர்த்தம் ஆயிற்று . இங்கு திருமால் யாளி(குதிரை) வடிவம் கொண்டு பூஜை செய்தார் .தில்லையாளி என்பது காலப்போக்கில் தில்லையாடி என அழைக்கப்படுகிறது.இன்றும் கோவில் கொடி மரத்தில் இந்த காட்சி உள்ளது.

இந்திரன் வழிபட்ட தலம் :

    தில்லையில் நடனமாடியது போல இங்கும் ஆட வேண்டும் என இந்திரன் வேண்ட , சிவபெருமான் ஆடியதால் தில்லை யாடி எனவும் பெயர் காரணம் கூறப்படுகிறது .

சனி பகவான் வழிபட்ட தலம் 

    தன்னுடைய அவப் பெயர் நீங்கவும் , தன்னை வணங்கும் பக்தர்களுக்கு நல்லது வழங்கவும் வேண்டி சனி பாகவன் வழிபட்டார் . இங்கு சனிபவன் தனி சன்னிதியில் இருப்பது சிறப்பு .

கோவில் அமைப்பு 

    சோழ மன்னனுக்கு கண் வழங்கியதால் இங்குள்ள விநயகர் நேத்திர கணபதி எனவும் , சோழ கணபதி ஆவர். இந்த விநாயகர் கஜ பிரச்ச விமானத்துடனும் , ஸ்வாமி இந்திர விமானத்துடனும்  உள்ளார் .ஐந்து நிலை ராஜ கோபுரம் , ஆறுபதடி உயரம் உடையது .கோவிலின் முன் சக்கர தீர்த்தம் உள்ளது . முருகன் , பைரவர் , துர்கை , நவகிரங்ககள் , சண்டிகேஸ்வரர் , அம்மாளுக்கும் , ஸ்வாமிக்கும் இடையே சனிக்கேஸ்வர பவான் உள்ளார் .வன்னி மரம் இடது புறமும் வில்வ மரம் வலது புறமும் காணப்படுகிறது .தன்னை நாடி வருபவர்களை காப்பதால் இவர் சார்ந்தாரைக் காத்த நாதர் கோயில் என அழைக்கப்படுகிறார் . 

வழிபாடு 

    கண் குறைபாடு உள்ளவர்கள் குறை நீங்கவும் , திருமணம் , புத்திர பேறு வேண்டியும் வழிபடுகின்றன .

இறைவன் :சார்ந்தாரைக் காத்த நாதர் , சரணாகத ரட்சகர்

இறைவி :பெரியநாயகி


கோவில் முகப்பு 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை

தல வரலாறு :      மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள்...