பாவச் சுமைகளை நீக்கும் பெருஞ்சேரி- வாகீசுவரர்(வாக்கு நல்கும் ஈஸ்வரர்,வாக்கு நல்கும் வள்ளல் ) கோவில்

தல வரலாறு:

பெருஞ்சேரி :அதிக மக்கள் வாழும் இடத்தினை சேரி என்பர் ,48000 முனிவர்கள் பிரம்மாவிடம் தவம் செய்ய இடம் வேண்டினர் .அவர் இந்த தார்ப்பை எங்கு விழுகின்றதா அங்கு தவம் செய்க என்றார். 48000 முனிவர்கள் தவம் செய்த இடம்  பெரிய சேரி மருவி பெருஞ்சேரி ஆனாது .

குரு வழிபட்ட தலம் : சந்திரன் குருவின் மனைவியே கவர்ந்து செல்ல , இதனால் வருத்தமுற்ற குரு மயூரநாதரிடம் மன அமைதி பெறவும் , தேவர்களுக்கு குருவாகவும் வேண்டினர் .மயூரநாதர் குருவிடம் தெற்கு திசையில் லிங்கம் வழிபாடு செய்து வா என்றார் . குருவின் தவத்தை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் மார்கழி மாதம் பூசம் நட்சத்திரத்தில் ஞான உபதேசம் செய்து தேவர்களுக்கு எல்லாருக்கும் குருவாக நியமித்தார்.குரு இத்தலத்தில் மன அமைதி பெற்றதால் , இது குரு பகை இடத்தில் அமர பெற்றவர்கள் , குரு தோஷம் உள்ளவர்கள் 7,9,10 இடத்தில் குரு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் நல்ல பலனே பெற முடியும். குருவிற்கு வாக் எனவும் பெயர் உண்டு  குரு வழிபட்டதால் வாகீசுவரர் எனவும் அழைக்கப்படுகிறார் .

சரஸ்வதி வழிபட்ட தலம் :தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட அனைவருமே வீரபத்திரர் தண்டித்தார்.சிவபெருமானுக்குரிய அவிர் பாகம் தர மறுத்த தட்சனின் யாகத்தை அழிக்க தொடங்கினார் .சினம் கொண்ட வீரபத்திரருக்கு சந்திரனே காலால் தேய்த்தார் , சூரியதேவனின் பல்லை உடைத்தார் , அக்னியின் கையே முறித்தும் , தீ உண்டாக்கிய ஏழு நாக்குகளையும் வெட்டினர்  குருவி வடிவம் கொண்ட இந்திரனின் சிறகுகளைவெட்டினர் , பிரம்மாவின் தலையில் குட்டினார் , பிரம்மா பூமியில் விழ , சரஸ்வதியின் மூக்கினை அறுத்தார். இறுதியில் வாள் கொண்டு தட்சனின் தலையே வெட்டினர் .
              சரஸ்வதி பிரம்மாவிடம் வேண்ட , அவர் பெருஞ்சேரி உள்ள லிங்க வழிபாடு செய் என்றார் .சரஸ்வதி  இங்கு வழிபட்டு , இழந்த தான் மூக்கையும் வாக்கு அளிக்கும் பேறையும் பெற்றாள். சரஸ்வதி பூஜை செய்யும் காட்சியை  காணலாம்.1000 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் .கோவிலின் வெளி சுற்றில் நான்கு யுகத்தின் பெயர் கொண்ட பைரவர்களை காணலாம் 

குரு பரிகார தலம் :
                வேலை , திருமணம் நடைபெறவும் , குரு பலம் பெற வேண்டுவரும் இங்கு 11வியாழன் கிழமை வந்து வழிபட நல்ல பலன் கிடைக்கும். 

இறைவன்-வாகீஸ்வரர்
இறைவி- ஸ்வந்தரனாயகி
தல விருட்சம் பன்னீர் மரம்

கோவிலின் முகப்பு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை

தல வரலாறு :      மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள்...