தலபுராணம் :
தாரகாசுரன் மகன்கள் பிரம்மனே நோக்கி கடும் தவம் புரிந்தனர்.அதன் பயனாக பல வரங்களைப் பெற்றனர். அந்த வரத்தின் மூலம் தாருகாட்சகன் பொன்னாலான கோட்டையையும், கமலாட்சகன் வெள்ளிக் கோட்டையையும், வித்யுன்மாலி இரும்புக் கோட்டையையும், கட்டிக்கொண்டு ஆளுக்கொரு திசையில் வாழந்தனர்.நாட்கள் செல்ல செல்ல அசுரர்கள் மக்களை மற்றும் தேவர்களுக்கு இடையூறு செய்தனர்.சிவபெருமானிடம் வேண்ட அவர் நீங்கள் அனைவரும் சரி பாதி சக்தியை தந்தால் தான் அவர்களையும் கோட்டையையும் அழிக்க முடியும். அதன்படி தேவர்களின் சக்தி தேராகாவும் , பிரம்மா தேரோட்டியாகவும் , விஷ்ணு அம்புவின் தண்டடாகவும் , அக்னி அம்பின் நுனியாகவும் , வாயு அம்பின் மேலாகவும் செய்து , வில்லை சிவபெருமான் ஏந்த முடிவானது . விஷ்ணுவும் ,பிரம்மாவும் தம்முடைய சக்தி இல்லையெனில் சிவபெருமானால் அசுரர்களை அழிக்க இயலாது என எண்ணி கர்வம் கொள்ள , இதனை அறிந்த சிவபெருமான் பலமாக சிரித்தார். அந்த அந்த சிரிப்பே ஆயுதமாக மாறி ,அசுரர்களை அவர்களுது கோட்டையும் அழித்தது . யார் துணையும் இல்லாமல் அழித்தார்.
தவற்றை உணர்ந்த பிரம்மாவும் , விஷ்ணுவும் , ஈசனிடம் வேண்ட புன்னாகவனம் என்னும் இடத்திலுள்ள லிங்கத்தை வழிபடுக என்றார் .இருவரும் அந்த இடத்திற்கு வந்த போது வள்ளல் மயூரநாதர் வேடுவ வடிவம் கொண்டு லிங்கத்தை காட்டினார்.இருவரும் சேர்ந்து சிவபெருமானிடம் நீங்களே பூஜை செய்ய வழி காட்டுமாறு வேண்ட, ருத்ரனே லிங்கத்தே வழிபட்டார். மும்மூர்த்திகள் வழிபட்ட தலம் ஆதலால் மூவலூர் என அழைக்கபடுகிறது.
மஹிஷசுரனே அழித்த துர்க்கை தன்னுடைய கோர முகம் மாறவும் , இறைவனை திருமணம் செய்யவும் வழி பட்ட தலம் .இங்கு இரண்டு அம்மாள்கள் உள்ளனர். மங்களநாயகி , சவுந்திரநாயகி இங்குள்ள குரு தட்சிணாமூர்த்தியின் திருவடின் யானை முகம் மான் சிம்மம் ரிஷபம் முதலியவையும் முயலகன் சனகாதியர் நால்வர் ஆகியோருடன் சேர்ந்திருப்பது சிறப்பு .நாற்புறமும் நான்கு சிறிய நந்திகளும் அதன் முன்னால் ஒரு பெரிய நந்தியும் நடுவில் பலிபீடம் அமைந்து இருப்பது சிறப்பு.கோவில் கிழக்கு நோக்கியும் , மயூரநாதருக்கு வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது .ஆதி மார்க்க சகாயேசுவரரும் சன்னதியும் உண்டு.
இதய நோய் மற்றும் ஆயில்யம் நட்சத்திரம் பரிகாரத் தலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக