தல வரலாறு
மூன்று விருட்சங்கள் உள்ள கோவில்
ஒரு முறை சோழ மன்னன் கோச்செங்கண்ணன் தீராத வயிறு வலியால் அவதியுற்றான் .மூன்று விருட்சம் எங்கு சேர்த்து உள்ளதோ அங்கு கோயில் கட்டினால் இந்த நோய் தீரும் என அசரரி கூற , மன்னனும் தேடி வர பாக்கு , கொன்றை , வில்வம் மூன்று மரங்கள் இருப்பதை அறிந்தான் .கோவில் காட்டும் பொது கோவிலின் மதில் சுவர் மட்டும் இடித்து விழுந்து கொண்டே இருந்தது.
மன்னன் சிவபெருமானிடம் வேண்ட , நாற்பத்தி எட்டு நாள் 1௦௦௦ அந்தணர்களுக்கு உணவு அளித்தல் இந்த குறைபாடு நீங்கும் என்றார் .
மன்னனும் அன்னதானம் செய்ய தினமும் 999 அந்தணர்கள் மட்டும் உணவு உண்ண , ஒரு இலை மட்டும் மீதம் இருக்க , மன்னன் ஈசனிடம் வேண்ட,நாற்பத்தி எட்டாவது வைத்து நாள் ஈசனே வயதான அந்தணர் வேடம் கொண்டு அமர , மன்னன் அவரிடம் உங்களுக்கு எந்த ஊர் என வினவினர்.அந்தணர் யாருக்கு ஊர் என்று மன்னரை கேக்க , எதிர்த்த அந்தணரே அடிக்க சீப்பாய்கள் வந்தனர்.
அவர் அங்கிருந்த புற்றில் சென்று மறைய , அதனை இடிக்க ஈசன் வெளிப்பட்டு காட்சி தந்தார்.கடப்பாரை பட்ட வடுக்களை காணலாம் வயதான அந்தணர் வடிவமே உற்சவர் ஆவார்.
பொய்யா பிள்ளையார்
இவர் கோவிலின் பின்புறத்தில் உள்ளார் , அந்தணர் வேடம் கொண்டு வந்த இவர் மன்னனிடம் என்ன பிரச்சனை என்ன கேட்டார்.மன்னனும் கோவில் கட்டுகிறான் , ஆனால் மதில் சுவர் இடிக்கிறது என்றார் .அந்தணரும் அருகில் இருக்கும் திருக்குளத்தில் மூன்றே முக்கால் நேரம் மூழ்கு என்றார் . இந்த குளத்திற்கு காசியை விட வீசம் அதிகம் என்றார்.மன்னனும் மூழ்க காசியில் விடும் பொருட்கள் கிடைக்க , மூன்றாவது முறை மூழ்கும் போது , கர்பகிரகமும் வந்தது .மன்னனும் மாடக்கோவில் அமைப்பில் கோவிலை கட்டி முடித்தான்.
வாள்நெடுங்கண்ணி
ஒரு முறை சிவனும் பார்வதி தேவியும் பூமியே வலம் வர , பூலோகத்தில் மாளிகை ஒன்று வேண்டும் , அதில் நாம் வாசம் செய்ய வேண்டும் என்றார் .சிவபெருமான் இந்த ஆசை வேண்டும் என்றார் , ஆனால் பாரவ்தி தேவி பிடிவாதமாக இருக்க , தேவதச்சன் விஸ்வகர்மா கொண்டு மாளிகை வடிவமைக்கபட்டது.புலஸ்தியர் முனிவர் மற்றும் பல ரிஷகள் கிரஹப்பிரவேசம் செய்ய இறைவனும் , இறைவியும் மகழ்ச்சியாக இருந்தனர்.
இறைவன் புலஸ்தியர் முனிவர் மற்றும் பல ரிஷிகளிடம் என்ன வரம் வேண்டும் என கேளுங்கள் என்றார்.அனைவரும் உங்கள் அருள் மட்டும் போதும் என கூற , புலஸ்திய முனிவரின் பத்தினி மட்டும் இந்த மாளிகை வேண்டும் என்றார்.கோவம் கொண்ட தேவி இந்த மளிகை ராணா களம் ஆகட்டும் என்று கூறி ஈஸ்வரனே பிரிந்து அத்ரி மகரிஷியின் மகளாக கட்கநேத்ரியாக வளர்ந்து வந்தார்.
ஈஸ்வரன் தியானத்தில் இருக்க , அகத்திய முனிவர் எப்பொழுது பார்வதி தேவியுடன் அருள்புரிவீர்கள் என்று கேட்டார்.தேவியிடம் சுயம்வர மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும் என அகஸ்திய முனிவரிடம் கூற , அவர் தேவிக்கு தெரிவிக்க , தேவி நாள்தோறும் ஜபம் செய்ய வசந்த நவராத்ரி அன்று ஆட்கொண்டார்.அகஸ்தியருக்கு மணக்கோலத்தில் காட்சியளித்த கோவில்களில் இதுவும் ஓன்று.
குபேரன் இராவணன் வாழ்ந்த இடம்
குபேரன் இராவணன் புலஸ்திய முனிவரின் பேரன்கள் ஆவார்கள் அவர்கள் இங்கு நான்கு வேதங்கள் கற்று , ஆறு அரங்கங்களை கற்றும் சிறப்பாக ஆட்சிபுரிந்துள்ளார்கள். .இங்குள்ள இறைவனே செவ்வாய் , வெள்ளி , ஞாயிற்றுக்கிழமை வழிபடஅர்ச்சனை செய்து வந்தால் வாழ்வில் எல்லா வளமும் கிடைக்கும்.
சிறப்புலி நாயன்மார் பிறந்து வாழ்ந்து முக்தியடைந்த தலம்.ராஜகோபுரத்தி கடந்து , இடப்பக்கம் ஆயிரத்தொருவர் சன்னதியும் நந்திதேவர் , நவகிரகம் சந்நதியும் , இரண்டு பாண லிங்கம் , வாயு லிங்கம் , அப்பு லிங்கம் , தேயுலிங்கம் காசி விஸ்வநாதர் , விசாலாட்சி , தட்சிணா மூர்த்தி , முருகன் , பைரவர் , சிறப்புலிநாயனார் மகாலிங்கம் சம்பந்தர் அப்பர் மாணிக்கவாசகர் பரவையார் சுந்தரர் , கணபதி பாலமுருகன் , துர்க்கை காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக