விள நகர் துறை காட்டும். வள்ளல்

தலவரலாறு :

அருள்வித்தன் என்ற அந்தணன் ஒருவன் உச்சிவனேஸ்வரர் மீது அளவில்லாது பக்தி கொண்டு இருந்தான். அவர் தினமும் மலர் மாலை செய்து இறைவனுக்கு கொடுத்து வந்தான். அந்தணனின் பக்தியை சோதிக்க விரும்பிய ஈசன் , அவன் வரும் வழியில் உள்ள காவேரியில் வெள்ளம் வர செய்தார். அந்த அந்தணன் மனம் தளராது அந்த பூக்கூடையை பாதுகாத்து இறைவனிடம் வேண்ட , ஆற்றின் துறை (கரை) காட்டினார் எனவே இவர் துறை காட்டும். வள்ளல் என்று அழைக்கப்படுகிறரர். திருஞானசம்பந்தர் இத்தலம் வர , காவேரியில் வெள்ளம் கரை புரண்டு ஓட , இங்கு துறை காட்டுவர் யாரோவது உள்ளனரா எனக் கேட்க இத்தலத்து ஈசனே வேடுவன் வடிவம் கொண்டு துறை காட்டி மறைந்தார்.

கோவில் அமைப்பு :

ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. சிவபெருமான் கிழக்கு நோக்கியும் ,மயூரநாதர் கோவிலுக்கு கிழக்கு நோக்கியும் உள்ளது . இறைவி வேயுறு தோளியம்மை சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருவதுடன் , நடராஜர் , நவகிரகங்கள் , முருகன் , பைரவர் உள்ளனர். சனி பகவான் வன்னி மரத்தின் அடியில் வீற்று இருக்கிறார்.பதிகம் பாடிய தலம் , இங்கு வந்து வழிபட்டால் பிறவி பெருங்கடலை சுலபமாக கடக்கலாம். 
 இறைவன் : உச்சிரவனேஸ்வரர் 
இறைவி : வேயுறு தோளியம்மை 
 தல விருட்சம் :விளா மரம் 
 முகவரி :
 அருள்மிகு உசிரவனேஸ்வரர் திருக்கோயில் திருவிளநகர் மயிலாடுதுறை வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 609305

கோவிலின் முகப்பு 


1 கருத்து:

சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை

தல வரலாறு :      மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள்...