சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை


தல வரலாறு :

    மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள் அனைவரும் தங்கத்தில் ஆன மூன்று ஆடைகளை நெய்தனர்.அவற்றில் ஒன்று இறைவனுக்கும் , மிருகண்டு ரிஷிக்கும் மூன்றாவதை நாட்டு மன்னனுக்கும் வழங்கினார். 

    ரிஷி யாகம் நடத்தும் போது அவற்றை யாக குண்டத்தில் போட்டுவிட்டார் .மக்கள் அனைவரும் எங்களின் காணிக்கை ஏவ்வாறு இறைவனே சேரும் என கேள்வி கேட்க , கோவிலின் உள்ளே சென்று பாருங்கள் . உங்களுக்கு விபரம் புரியும் என்றரர்.

    மக்கள் கோவிலின் உள்ளே சென்று போது , மூலவரின் மீது அந்த பட்டு ஆடை இருந்தது. மக்கள் அனைவரும் இது இப்படி நடந்தது என கேட்டனர். 

    அக்னியில் போடப்படும் அனைத்து பொருட்களும் புனிதம் ஆகும். அக்னியில் பல வகை உள்ளது . அதில்பரணி என்னும் ருத்ரகாக்னி யாகத்தில் இடும் பொருட்களை இறைவனிடம் சேர்க்கிறது என கூறினார் . இது பரணி நட்சத்திரம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோயில் ஆகும் .இங்கு இறைவன் அக்னி சொரூபமாக இருப்பதால் அக்னிக்கேஸ்வரன் என அழைக்கப்படுகிறார்.

இறைவனை குளிரிவிப்பதற்கு லிங்கத்தின் கீழ் தாழ்வான பகுதி உள்ளது அதனை சுற்றி நீர் ஊற்றி இருப்பது சீறப்பு.தல விருட்சம் வில்வ மரம் ஆகும்.இந்த நாட்டின் மன்னனும் , சிவனேச நாயன்மாரும் சிவனை தரிசிக்க வந்தனார்.புலி ஒன்று சிவனேச நாயன்மாரை துரத்த , அவர் வில்வ மரத்தின் மீது அமர்ந்து கொண்டார்.புலி சென்று விட அவர் மரத்தில் இருந்து இறங்கி குண்டாங்குளம் சென்ற போது , அந்த புலி கொன்றார்.சிவபெருமான் அவருக்கு காட்சி தந்தார் .

கோவில் அமைப்பு 

    இங்கு ஈசன் மேற்கு நோக்கி அமர்ந்து உள்ளார் .கோவிலை சுற்றி மூன்று ராஜா கோபுரங்கள் , கருவறை சுற்றில் கணபதி , பாலமுருகன் , தட்சிணா மூர்த்தி , வீரபத்திரர் , துர்க்கை , பைரவர் , சனீஸ்வரன் உள்ளார் .இங்கு நவக்கிரகங்கள் கிடையாது.இறைவனுக்கு ஆடை நெய்து தந்ததால் நெய்தலாடை என வழங்க பட்டு , நல்லாடை என அழைக்கப்படுகிறது .பரணி நட்சத்திரம் உள்ளவர்கள் தங்களின் தோஷம் போக வழிபட வேண்டிய கோயில் .




திருச்செம்பொன்பள்ளி (செம்பனார்கோவில் ) சுகந்த குந்தளாம்பிகை சமேத ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்

தல வரலாறு :

    தட்சன் தான் மகள் தாட்சாயினியை சிவபெருமானுக்கு மணம் செய்து கொடுத்தான்.தட்சன் சிவபெருமான் மீது கோவம் கொண்டு , தான் நடத்திய யாகத்திற்கு அழைப்பு விடுக்காமல் இருந்தான் . இதனை அறிந்த தாட்சாயினி சிவபெருமானின் சொல்லை கேளாமல் தந்தையே திருத்தும் வேண்டி திருப்பறியலூர் சென்றார் .

    தாட்சாயினி எவ்வளவு சொல்லியும் தட்சன் கேட்கவில்லை , கோவம் கொண்ட தேவி , இந்த யாகம் அழிந்து  போகட்டும் என கூறி சிவபெருமானிடம் வேண்டி , யாக குண்டத்தில் உயிரே விடுகிறார் .சிவபெருமான் வீரபத்திரர் உருவாக்கி யாகத்தை அழித்தார் .

முருகன் அறிவுரை 

    தான் தவறே உணர்ந்த தேவி , பஞ்சாக்னி மத்தியில் தவம் செய்ய , அவரே சிவபெருமான் ஏற்று கொள்கிறார் .இங்குள்ள முருக பெருமான் சிவன் வடிவில் பார்வதி தேவிக்கு அறிவுரை கூற , கையில் அட்சய மாலையுடன் இருப்பது.

    இத்தலத்து ஈசன் பதினாறு இதழ்களையுடைய ஆவுடையில் சுயம்புவாக இருப்பது.சித்தரை மாதம் ஏழாம் நாள் இருந்து பதினென்டு நாள் வரை சூரிய ஒளி படுகிறது .

இலட்சமிபுரி 

    லட்சுமி இத்தலத்து சிவபெருமானே வழிபாட்டு விஷ்ணுவை கணவனை அடைந்ததாகவும் கூறப்படுகிறது , எனவே இது இலட்சமிபுரி எனவும் அழைக்கப்படுகிறது .

 இந்திரபுரி

    இந்திரன் விருத்திராசூரனே வெல்ல இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி , சிவனே வழிபாட்டு வஜ்ர ஆயுதம் பெற்றதால் இந்திரபுரி எனவும் அழைக்கப்படுகிறது .

கந்தபுரி

    முருகன் வழிபாட்டு தருகானே அழித்தால் இது கந்தபுரி எனவும் அழைக்கப்படுவது உண்டு.வன்னி வில்வம் என இரண்டு தல விருச்சங்கள் காணப்படுகிறது .தேவாரம் பாடல் பெற்ற தலம் 

கோவில் அமைப்பு 

    கிழக்கு நோக்கி அமைத்துள்ள , மாடக்கோவில் ஆகும் .இங்கு வீரபத்திரர் , பைரவர் , துர்கை , கணபதி , முருகன் நவகிரகம் , உள்ளது .

                                                        கோவில் முகப்பு 


ஆக்கூர் வாள்நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீசுவரர்

 தல வரலாறு  

மூன்று விருட்சங்கள் உள்ள கோவில் 

    ஒரு முறை சோழ மன்னன் கோச்செங்கண்ணன் தீராத வயிறு வலியால் அவதியுற்றான் .மூன்று விருட்சம் எங்கு சேர்த்து உள்ளதோ அங்கு கோயில் கட்டினால் இந்த நோய் தீரும் என அசரரி கூற , மன்னனும் தேடி வர பாக்கு , கொன்றை , வில்வம் மூன்று மரங்கள் இருப்பதை அறிந்தான்  .கோவில் காட்டும் பொது கோவிலின் மதில் சுவர் மட்டும் இடித்து விழுந்து  கொண்டே இருந்தது.

    மன்னன் சிவபெருமானிடம் வேண்ட , நாற்பத்தி எட்டு நாள் 1௦௦௦ அந்தணர்களுக்கு உணவு அளித்தல் இந்த குறைபாடு நீங்கும் என்றார் .

    மன்னனும் அன்னதானம் செய்ய தினமும் 999 அந்தணர்கள் மட்டும் உணவு உண்ண , ஒரு இலை மட்டும் மீதம் இருக்க , மன்னன் ஈசனிடம் வேண்ட,நாற்பத்தி எட்டாவது வைத்து நாள் ஈசனே வயதான அந்தணர் வேடம் கொண்டு அமர , மன்னன் அவரிடம்  உங்களுக்கு எந்த ஊர் என வினவினர்.அந்தணர் யாருக்கு ஊர் என்று மன்னரை கேக்க , எதிர்த்த அந்தணரே அடிக்க சீப்பாய்கள் வந்தனர்.

    அவர் அங்கிருந்த புற்றில்  சென்று மறைய , அதனை இடிக்க ஈசன் வெளிப்பட்டு காட்சி தந்தார்.கடப்பாரை பட்ட வடுக்களை காணலாம் வயதான அந்தணர் வடிவமே உற்சவர் ஆவார்.

பொய்யா பிள்ளையார்

    இவர் கோவிலின் பின்புறத்தில் உள்ளார் , அந்தணர் வேடம் கொண்டு வந்த இவர் மன்னனிடம் என்ன பிரச்சனை என்ன கேட்டார்.மன்னனும் கோவில் கட்டுகிறான் , ஆனால் மதில் சுவர் இடிக்கிறது என்றார் .அந்தணரும் அருகில் இருக்கும் திருக்குளத்தில் மூன்றே முக்கால் நேரம் மூழ்கு என்றார் . இந்த குளத்திற்கு காசியை விட வீசம் அதிகம் என்றார்.மன்னனும் மூழ்க காசியில் விடும் பொருட்கள் கிடைக்க , மூன்றாவது முறை மூழ்கும் போது , கர்பகிரகமும் வந்தது .மன்னனும் மாடக்கோவில் அமைப்பில் கோவிலை கட்டி முடித்தான்.

வாள்நெடுங்கண்ணி

    ஒரு முறை சிவனும் பார்வதி தேவியும் பூமியே வலம் வர , பூலோகத்தில் மாளிகை ஒன்று வேண்டும் , அதில் நாம் வாசம் செய்ய வேண்டும் என்றார் .சிவபெருமான் இந்த ஆசை வேண்டும் என்றார் , ஆனால் பாரவ்தி தேவி பிடிவாதமாக இருக்க , தேவதச்சன் விஸ்வகர்மா கொண்டு மாளிகை வடிவமைக்கபட்டது.புலஸ்தியர் முனிவர் மற்றும் பல ரிஷகள் கிரஹப்பிரவேசம் செய்ய இறைவனும் , இறைவியும் மகழ்ச்சியாக இருந்தனர்.

    இறைவன் புலஸ்தியர் முனிவர் மற்றும் பல ரிஷிகளிடம் என்ன வரம் வேண்டும் என கேளுங்கள் என்றார்.அனைவரும் உங்கள் அருள் மட்டும் போதும் என கூற , புலஸ்திய முனிவரின் பத்தினி மட்டும் இந்த மாளிகை வேண்டும் என்றார்.கோவம் கொண்ட தேவி இந்த மளிகை ராணா களம் ஆகட்டும் என்று கூறி ஈஸ்வரனே பிரிந்து அத்ரி மகரிஷியின் மகளாக கட்கநேத்ரியாக வளர்ந்து வந்தார்.

    ஈஸ்வரன் தியானத்தில் இருக்க , அகத்திய முனிவர் எப்பொழுது பார்வதி தேவியுடன் அருள்புரிவீர்கள் என்று கேட்டார்.தேவியிடம் சுயம்வர மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும் என அகஸ்திய முனிவரிடம் கூற , அவர் தேவிக்கு தெரிவிக்க , தேவி நாள்தோறும் ஜபம் செய்ய வசந்த நவராத்ரி அன்று ஆட்கொண்டார்.அகஸ்தியருக்கு மணக்கோலத்தில் காட்சியளித்த கோவில்களில் இதுவும் ஓன்று.

குபேரன் இராவணன்  வாழ்ந்த இடம் 

    குபேரன் இராவணன் புலஸ்திய முனிவரின் பேரன்கள் ஆவார்கள் அவர்கள் இங்கு நான்கு வேதங்கள் கற்று , ஆறு அரங்கங்களை கற்றும் சிறப்பாக ஆட்சிபுரிந்துள்ளார்கள்.  .இங்குள்ள இறைவனே செவ்வாய் , வெள்ளி , ஞாயிற்றுக்கிழமை வழிபடஅர்ச்சனை செய்து வந்தால் வாழ்வில் எல்லா வளமும் கிடைக்கும்.

    சிறப்புலி நாயன்மார் பிறந்து வாழ்ந்து முக்தியடைந்த தலம்.ராஜகோபுரத்தி கடந்து , இடப்பக்கம் ஆயிரத்தொருவர் சன்னதியும் நந்திதேவர் , நவகிரகம் சந்நதியும் , இரண்டு பாண லிங்கம் , வாயு லிங்கம் , அப்பு லிங்கம் , தேயுலிங்கம் காசி விஸ்வநாதர் , விசாலாட்சி , தட்சிணா மூர்த்தி , முருகன் , பைரவர் , சிறப்புலிநாயனார் மகாலிங்கம் சம்பந்தர் அப்பர் மாணிக்கவாசகர் பரவையார் சுந்தரர் , கணபதி பாலமுருகன் , துர்க்கை காணலாம்.  

கருவறை முகப்பு 



திருக்கடவூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர்

தல வரலாறு :

குழந்தை வரம் வேண்டல் 

    மிருகண்டு முனிவரும் அவரது மனைவியும் குழந்தைவரம்  வேண்டி இத்தலத்து சிவனை வழிப்பட்டனர்  .சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி நீண்ட ஆயுள் உள்ள தீய  குணம் உள்ள குழந்தையா அல்லது பதினாறு வயது மட்டும் உடைய நல்ல குணம் கொண்ட குழந்தையா ?என கேட்டார் இருவரும் நல்ல குணம் உள்ள குழந்தை வேண்ட பிறந்தது. அதற்கு மார்கண்டயன் என பெயரிட்டு வளர்த்து வந்தனர் .அவனும் சிறந்த சிவபக்தனாக இருந்தான். 

எமன் சம்காரம் 

    மிருகண்டு முனிவர் அவனின் ஆயுள் முடியும் காலத்தை கூற , அவனும் அந்த நாளன்று சிவ பூஜை செய்ய , எமன் வந்து பாச கயிற்றை வீச , மரக்கண்டயன் சிவபெருமானினின் லிங்க திருமேனியை தழுவிக்கொண்டான் .பாச கயிறு சிவபெருமான் வீழ , கோவம் கொண்ட ஈஸ்வரன் லிங்க திருமேனில் இருந்து வெளிப்பட்டு எமனை  சம்காரம் செய்தார் .இன்றளவும் லிங்கத்தில் தழும்புகள்  உள்ளதை அபிஷேகத்தின் போது  காணலாம். சிவபெருமானின் வீரம் வெளிப்பட்டதால் இது அட்ட வீரேட்ட தலங்களில் இது கடைசியாக உள்ளது.

கள்ள பிள்ளையார்

    கள்ள பிள்ளையார் தேவர்கள் அம்ரிதம் கடிந்த போது விநாயகர் வணங்காத காரணத்தால் , கோவம் கொண்ட கணபதி அமிர்தத்தை இங்கு  மறைத்து வைத்தார் .சிவபெருமானை  தேவர்கள் வேண்ட , விநாயகர் வணங்கி பெறுக என்று கூறினார் .வினாயகரை வணங்கி அமிர்த குடத்தை பெற்றனர்.

அபிராமி பட்டர்:

    பட்டர் என்பவர் அபிராமி அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்டுஇருந்தார் .இது அங்குள்ள ஐயருக்கு பிடிக்கவில்லை.சரபோஜி மன்னர் திருக்கடவூர் கோயிலை காண வந்தார் .அவரிடம் பட்டர் பற்றி தவறாக  கூற , மன்னர் அவரின் பக்தியை சோதிக்க விரும்பினர் .பக்தியில் மூழ்கிய பட்டரிடம் நாளைக்கு என்ன திதி என கேட்க , அதற்கு பௌர்ணமி என கூறினார் .நாளை முழு நிலவை காட்டவில்லை என்றால் ,உன்  தலை வெட்டப்படும் என்றார் . 

நிலவை காட்டிய அபிராமி அம்மன் :

    தான் தவறை உணர்ந்த பட்டர் , அபிராமி மீது கொண்ட நம்பிக்கையில் , நான் காட்டுகிறான் என்றார். அபிராமி அந்தாதி பாடும் போது , தன்னுடைய காதணியை வீசி நிலவை காட்டினார்.அவர் பாடிய  பாடல்கள்  தான் அபிராமி அந்தாதி ஆகும் .இந்த விழா தை அமாவாசை அன்று நடை பெறுகிறது.மஹாவிஷ்ணுவின் ஆபராணத்தில் இருந்து அபிராமி தோன்றியதாக கூறப்படுவது சிறப்பு .

அகத்தியர் மற்றும்  புலத்தியர் வழிபட்ட லிங்கங்கள் :

    வில்வவனநாதர் பிரம்ம வழிபட்ட இந்த லிங்கத்திற்க்கு மாலை பூஜை செய்யப்படுகிறது.அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் வணங்கியபின்பே ,மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும்..காலசம்ஹார மூர்த்தி கிரக சாந்தி செய்து கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.காலசம்ஹார மூர்த்தி கிரக சாந்தி செய்து கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.

ஆலய அமைப்பு  கிழக்கு மேற்கு என இரண்டு ராஜ கோபுரங்கள் உள்ளன கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்தில் முனி ஈஸ்வரர் உள்ளதால் முனீஸ்வர கோபுரம் என அலைக்கப்படுகிறது .
அமிர்தகடேஸ்வரர் மேற்கு   நோக்கியும் அபிராமி அன்னை சிவபெருமானே நினைத்து இருப்பதால் கிழக்கு  நோக்கியும் உள்ளது .கால சம்கார மூர்த்தி , பைரவர் , சப்த கன்னியர்களையும் , அம்பாள் சுற்றி சரஸ்வதி , பட்டர் காணலாம்.
இங்கு ஆறுவது வயதை  கடந்தவர்கள் திருமணம் மற்றும் ஆயுள் விருத்தி ஹோமும் செய்யப்படுகிறது பீம ரத சாந்தி சதாபிஷகம் செய்யப்படுகிறது வேலை கிடைக்கவும் பரிகாரம் செய்யபடுகிறது .

இறைவன் அமிர்தகடேஸ்வரர் 
இறைவி அபிராமி
தல விருட்சம்:வில்வம் பிஞ்சிலம்(சாதி முல்லை) 

 

                                                                கோவில் முகப்பு 


சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை

தல வரலாறு :      மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள்...