தல வரலாறு
திருமெய்ஞானம் மலர்க்குழல் மின்னம்மை சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவிடைக்கழி முருகன் ஆலயம்
தலவரலாறு
முருகன் வழிபட்ட தலம் :
திருச்செந்தூர் முருகப்பெருமான் சூரனே வதம் செய்யும் போது , சூரனினின் மகன் ஹிரண்யாசுரன் தாத்தாவின் திதி அளிக்கும் வேண்டும் என்று மீன் வடிவம் கொண்டு தரங்கம்பாடி கடலில் இருந்தான் .இதனை அறிந்த முருகப்பெருமான் அவனை தேடி வதம் செய்து முடித்தார். ஹிரண்யாசுரன் ஒரு சிவபக்தன் , அவனே கொன்றதால் பாவம் வந்து சேர்ந்தது. முருகனுக்கு அதனை போக்க குரா மரத்தின் கீழே இருக்கும் சிவபெருமானே பூஜை செய்தார் .சிவபெருமான் முருகனின் பாவத்தை போக்கி தனக்கு முன்னால் அமர்ந்து இருந்து பக்தர்களின் பாவத்தை நீக்க வேண்டும் என்றார் .கருவறையில் முருகனின் சிலைக்கு பின் சிவபெருமான் லிங்க வடிவம் காணப்படுவது சிறப்பு .கல்வெட்டில் முருகனுடைய பெயர் திருக்குராத்துடையார் என்று குறிக்கப்பட்டுள்ளது.
முருகனின் காலடி பட்ட தலங்கள்
முருகனின் காலடி பட்ட தலங்கள் இரண்டு மட்டுமே அதில் திருவிடைகழி ஒன்று .தான் பாவம் போக்க விடை தேடி வந்தால் திருவிடைக் கழி என அழைக்கப்படுகிறது .மற்றொன்று முருகப்பெருமான் வள்ளியை மணம் புரிந்த வள்ளிமலை.
ராகு வழிபட்ட தலம்
ராகு தேவன் இங்குள்ள குரா மரத்தின் அடியில் அமர்ந்து முருகப்பெருமானே வழிபட்டார் .இங்கு வந்து வழிபட ராகு தோஷம் விலகும் .
சேந்தனார் முக்தியடைந்த இடம்
சேந்தனார் முக்தி அடைந்த தலம், திருப்பல்லாண்டு பாடி சேந்தனார் , முருகனே வழிபட்டு இங்குள்ள குரா மரத்தின் கீழ் தைப்பூசம் அன்று முக்தி அடைந்தார் .அன்றைய தினம் இவருக்கு அபிஷேகம் நடைபெறும் .
கோவில் அமைப்பு
கிழக்கு நோக்கி ஏழு நிலை ராஜகோபுரம் கொடி மரத்தின் அடி யில் கணபதி மட்டும் இல்லாமல் முருகன் சேர்ந்து இருப்பது சிறப்பு.சர்வமும் சிவமயம் என்பது போல, இந்த தலத்தில் சர்வமும் முருகன் ஆவார் இங்குள்ள கணபதி முதல் சோமதஸ்கந்தர் , சண்டிகேசுஸ்வரர் , என அனைவரும் வஜ்ர வேலுடன் காட்சி தருவதும் , நவக்கிரகங்கள் இல்லாதால் இத்தலத்து முருகனே நவகிரஹ தோஷம் போக்குவார் .
முருகன் வழிபட்ட பலிபீடம் (பத்ர லிங்கம்) , கருவறையைச் சுற்றி முன்புறம் ஸ்படிக லிங்கமும், தட்சிணாமூர்த்தியும்(தெற்கு), பின்புறம் பாபநாசப் பெருமானும்(வடக்கு),வசிஷ்ட லிங்கமும் காட்சி தருவது சிறப்பு .கோவிலை சுற்றி நான்கு திசையிலும் அய்யனார் கோவில் இருக்கிறது .
ஆடி கிருத்திகை , புரட்டாசி முதல் வெள்ளி கிழமை பல்வேறு ஊரில் இருந்து நடந்து வருகின்றனர் .ராகு தோஷம் நீங்கவும் , விரைவில் திருமணம் நடை பெறவும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.இங்கு முருகனுக்கு மயிலுக்கு பதில் யானை வாகனமாக இருக்கிறது .
இறைவர் :காமேசுவரர்
இறைவி :காமேசுவரி
தல மரம்:குரா மகிழம்
தில்லையாடி பெரியநாயகி சமேத சரணாகத ரட்சகர் கோவில்
தலவரலாறு :
சோழ மன்னன் ஒருவன் திருக்கடையூர் கோவிலுக்கு நன்கொடை வழங்கி , புதுப்பித்து குடமுழுக்கு செய்யும் வரை , மந்திரியிடம் பார்த்து கொள்ளுமாறு கூறினார் .மந்திரி தில்லையாடி சிவன் கோவிலையும் புதுப்பித்தார் இதனை அறிந்த விக்ரம சோழ மன்னன் மந்திரியின் கைளை வெட்ட தன்னுடைய வாளை ஒங்க , சிவபெருமான் முன்னே தோன்றி மந்திரியை காக்க , அந்த ஒளி தாங்க முடியாமல் மன்னரின் கண் பார்வை பறி போனது .மன்னர் தில்லையாடி கோவில் வந்து ஈசனே வழிபட்டு மீண்டும் கண் பார்வை பெற்றரர். தன்னை நாடி வருபவர்களை காப்பதால் இவர் சார்ந்தாரைக் காத்த நாதர் கோயில் என அழைக்கப்படுகிறார் .
பெருமாள் வழிபட்ட கோவில்
இரண்யட்சகன் என்ற அசுரனே கொன்றதால் வீர ஹத்தி தோஷம் ஏற்பட்டது .அதனை போக்க , திருமால் திருவீழிமலையில் சிவபெருமானே வழிபட்டு சக்கர ஆயுதம் பெற்று தில்லைவனம் வந்தார் .திருமால் சக்கரா ஆயுதம் கொண்டு உருவாக்கிய தீர்த்தம் சக்கர தீர்த்தம் ஆயிற்று . இங்கு திருமால் யாளி(குதிரை) வடிவம் கொண்டு பூஜை செய்தார் .தில்லையாளி என்பது காலப்போக்கில் தில்லையாடி என அழைக்கப்படுகிறது.இன்றும் கோவில் கொடி மரத்தில் இந்த காட்சி உள்ளது.
இந்திரன் வழிபட்ட தலம் :
தில்லையில் நடனமாடியது போல இங்கும் ஆட வேண்டும் என இந்திரன் வேண்ட , சிவபெருமான் ஆடியதால் தில்லை யாடி எனவும் பெயர் காரணம் கூறப்படுகிறது .
சனி பகவான் வழிபட்ட தலம்
தன்னுடைய அவப் பெயர் நீங்கவும் , தன்னை வணங்கும் பக்தர்களுக்கு நல்லது வழங்கவும் வேண்டி சனி பாகவன் வழிபட்டார் . இங்கு சனிபவன் தனி சன்னிதியில் இருப்பது சிறப்பு .
கோவில் அமைப்பு
சோழ மன்னனுக்கு கண் வழங்கியதால் இங்குள்ள விநயகர் நேத்திர கணபதி எனவும் , சோழ கணபதி ஆவர். இந்த விநாயகர் கஜ பிரச்ச விமானத்துடனும் , ஸ்வாமி இந்திர விமானத்துடனும் உள்ளார் .ஐந்து நிலை ராஜ கோபுரம் , ஆறுபதடி உயரம் உடையது .கோவிலின் முன் சக்கர தீர்த்தம் உள்ளது . முருகன் , பைரவர் , துர்கை , நவகிரங்ககள் , சண்டிகேஸ்வரர் , அம்மாளுக்கும் , ஸ்வாமிக்கும் இடையே சனிக்கேஸ்வர பவான் உள்ளார் .வன்னி மரம் இடது புறமும் வில்வ மரம் வலது புறமும் காணப்படுகிறது .தன்னை நாடி வருபவர்களை காப்பதால் இவர் சார்ந்தாரைக் காத்த நாதர் கோயில் என அழைக்கப்படுகிறார் .
வழிபாடு
கண் குறைபாடு உள்ளவர்கள் குறை நீங்கவும் , திருமணம் , புத்திர பேறு வேண்டியும் வழிபடுகின்றன .
இறைவன் :சார்ந்தாரைக் காத்த நாதர் , சரணாகத ரட்சகர்
இறைவி :பெரியநாயகி
சித்தர்காடு திரிபுரசுந்தரி சமேத பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோயில்
தல வரலாறு :
பிரம்மபுரீஸ்வரர் கோயில் மயிலாடுதுறைக்கருகிலுள்ள சித்தர்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இந்த தலத்தில் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதி உள்ளது.இக்கோயில் கருவறையின் சுவரில் 63 சிவலிங்கமும் இது குறித்த கல்வெட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன .
சீகாழி சிற்றம்பல நாடிகள்
திருச்செந்தூர் முருகனின் அருளால் சிற்றம்பல அடிகள் ஞான சித்திய பெற்றார் அவரோட ஆறுபத்தி நான்கு (64) சீடர்களும் இருந்தனர் .
கண்ணப்பனார் விலகல்
ஒரு முறை விருந்தின் போது பருப்பு நெய்க்கு பதிலாக வேப்ப எண்ணெய் தவறுதலாக ஊற்றி விட கண்ணப்பர் தவிர மற்ற அனைவரும் உணவை உட்கொண்டனர் .கண்ணப்பர் மட்டும் கசப்புத் தன்மை தெரிகிறது வேப்ப எண்ணையை ஊற்றி விட்டர்கள் என்றார் .குரு நம்முடைய கூட்டத்தில் கண்ணப்பருக்கு மட்டும் போதிய ஞானம் வரவில்லை என கூற , அவர் கூட்டத்தை விட்டு சென்றார் .
ஜீவ சமாதி அடைய விருப்பம்
இந்த நிலையில் சிற்றம்பல அடிகள் சித்தரை மாதம் திருவோண நட்சத்திரம் அன்று ஜீவ சமாதி அடைய சோழ மன்னரிடம் இடம் கேட்டார்.அவரும் காவேரி கரை மேற்கில் இடம் ஒதுக்க குருவும் அவருடைய சீடர்களும் இறைவினிடம் ஐக்கியம் ஆனார்கள்.
கண்ணப்பர் ஆட்கொள்ளுதல்
இதனை கேள்வியுற்ற கண்ணப்பர் வர ,குருவே என்னையும் ஏற்று கொள்ளுங்கள் என்று கண்ணீர் வடிக்க , சித்தர் வெளிப்பட்டு அவர் இரு கைகளாலும் அவரை தழுவி ஆட் கொண்டார் .
கோவில் அமைப்பு :
கிழக்கு நோக்கிய சிவபெருமான் மற்றும் ஜீவ சமாதி உள்ளது .கருவறையின் வெளியில் 63 லிங்கங்கள் சீடர்களின் நினைவாக செதுக்க பட்டுள்ளன .விசாலாட்சி , மஹாவிஷ்ணு , முருகன் , கணபதி , பைரவர் , நவக்கிரக சன்னிதி சனி சூரியனை , சண்டிகேஸ்வரர் உள்ளனர் .
இறைவன் :பிரம்மபுரீஸ்வரர்.
இறைவி :திரிபுரசுந்தரி
சேந்தங்குடி பரமகல்யாணி சமேத பசுபதீஸ்வரர் சிவன் கோயில்
விசலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர் கோவில் (மயிலாடுதுறை)
படித்துறை விஸ்வநாதர் காவேரி ஆற்றின் அருகில் உள்ள கோவில் ஆகும் படித்துறை அருகில் உள்ளதால் படித்துறை விஸ்வநாதர் எனவும் , அம்பிகை விசலாட்சி ஆவார் .காவேரியின் வடகரையில் ஒரு காசிவிஸ்வநாதர் கோவிலும் , கூறைநாட்டில் ஒரு காசி விஸ்வநாதர் கோயிலும் , காவேரி ஆற்றின் மறுகரையில் ஒரு காசி விஸ்வநாதர் ஆலயம் என நான்கு ஆலயங்கள் உள்ளதால் இது காசிக்கு நிகரான இடம்
மங்கல சனி பகவான்:
படித்துறை காசிவிஸ்வநாதர் கிழக்கு நோக்கியும் , அம்மன் தெற்கு நோக்கியும் , மங்கல சனி பகவான் கிழக்கு நோக்கியும் , எதிரில் பைரவர் மற்றும் சூரியன் உள்ளார் .
காவேரி கரையில் கேதாரநாதர் , பைரவர் , தூண்டி கணபதி உள்ளார். அந்த காவேரி கரை உள்ள விஸ்வநாதர் கோவில் வடக்கே உள்ள காசி போன்று விமானம் உள்ளது .மயிலாடுதுறை காசிக்கு நிகரான இடம் .
கோவில் முகப்பு
குயிலாண்டேஸ்வரி சமேத ஆலந்துறையப்பர்-நல்லதுக்குடி
தல வரலாறு
அம்பிகை குயில் வடிவம் கொண்டு இறைவனை பூஜை செய்ததால் குயிலாண்டேஸ்வரி என அழைக்கப்படுகிறார் சிவபெருமான் ஆலமரத்தின் கீழ இருப்பதால் ஆலந்துறையப்பர் என அழைக்கப்படுகிறார்இது மிகவும் சிறிய தேவார வைப்பு தலம் . கோபுரம் இல்லாத கோவில். சூரியன் இங்கு தீர்த்தம் அமைத்து சிவபெருமானே வழிபட்டதால் இது சூரியன் பரிகாரக் கோயில் .கோவிலின் எதிரில் சூரியன் உருவாக்கிய தீர்த்தம் காணப்படுகிறது. சூரிய புஷ்கரணியில் நீராடி இறைவனை வழிபடுவோர் தொழு நோய் முதலிய சரும நோய்கள் நீங்கப்பெற்று குணமடைவர் என்று கூறப்படுகிறது
இங்கு அரசாங்க வேலை கிடைக்கவும் , சூரிய தோஷம் விலகவும் பூஜை செய்யப்படுகிறது திருமணம் நடக்கவும்.இது மயிலாடுதுறை இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் நல்லதுக்குடி கிராமத்தில் உள்ளது.
கோவில் முகப்பு
ஸ்ரீசாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோவில் -கூறைநாடு
தல வரலாறு
தட்சனின் யாகத்தில் கலந்துக்கொண்ட இந்திரனை சிவபெருமான் புணுகுப்பூனையாக மாறுவாயாக என சபித்துவிடுகிறார் கூறை நாட்டில் வந்து , பூனை அணுதினமும் மணம் கமழும் புணுகிணை பூசி , வில்வ இலைகளை வாயால் கவ்வி கொண்டு பன்னீர் மரத்தின் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பூஜை செய்து வந்தது. திருமணத்திற்கு நெய்யும் கூறை பட்டு நெய்பவர்கள் வாழந்து வந்தால் இது கூறைநாடு எனவும் , தனியூர் எனவும் அழைக்கப்படுகிறது .
புணுகுப்பூனையின் பக்திக்கு ஏற்றுக்கொண்ட சிவபெருமான் அதற்கு தேவா வடிவம் கொடுத்து ஆட்க்கொண்டார் .புணுகு வழிபட்டதால் புனுகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் .இறைவனின் கருணையை கண்ட தேவர்களும் , பிரம்மாவும் பன்னீர் மரத்தின் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிபட்டனனர்.நேசநாயனார் ஆடை செய்து சிவனடியார்களுக்கு வழங்கி தொண்டு செய்தவர்.அவருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது
கோவில் அமைப்பு
ஜந்து நிலை ராஜ கோபுரங்களை கடந்து கொடி மரம் சிவன் , அம்பாள் , சண்டி கேஸ்வரி , பைரவர் முருகன் , கணபதி , நவகிரகங்கள் , பிரம்மன், துர்க்கை, லிங்கோத்பவர் தென்முககடவுள், ஜுரகறேஸ்வரர் உள்ளன. '
வழிபாடு
ஒன்பது பிரதோஷம் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமணம் , எதிர்க்கலாம் நன்றாக அமையும் .
இறைவன்- புனுகீஸ்வரர்
இறைவி- சாந்த நாயகி
மயிலாடுதுறை ஐயாறப்பர் சமேத அறம் வளர்த்த நாயகி கோயில்
நாதசர்மா மற்றும் அனவித்யாம்பிகை திருவையாற்றை சேர்த்த இந்த தம்பதிகள் தினமும் ஐயாறப்பர் சுவாமியை தினமும் வணங்குவது வழக்கம்.இருவரும் மயிலாடுதுறை சென்று மயூரநாதரை வணங்கி , அன்றைய தினமே ஐயாறப்பர் வணங்க நினைத்தனர் ,வெகு நேரமாகிவிட்டதால் ஐயாறப்பர் வணங்க இயலாமல் முடியாமல் நினைத்து வருத்தமுற்றனர்.முக்தி அளிக்க நினைத்த சிவபெருமான் அவர்கள் முன் தேன்றி , மயூரநாதர் கோவிலின் எதிர் திசையில் ஐயாறப்பர் சமேத அறம் வளர்த்த நாயகி வீற்று இருக்க அங்கு சென்று வணங்கி எம்மை முக்தி அடைவாய்.அத்தம்பதிகள் முக்தி அடைந்த லிங்கங்கள் மயூரநாதர் கோவிலில் உள்ளன .
கோவில் அமைப்பு :
பாவச் சுமைகளை நீக்கும் பெருஞ்சேரி- வாகீசுவரர்(வாக்கு நல்கும் ஈஸ்வரர்,வாக்கு நல்கும் வள்ளல் ) கோவில்
தல வரலாறு:
பெருஞ்சேரி :அதிக மக்கள் வாழும் இடத்தினை சேரி என்பர் ,48000 முனிவர்கள் பிரம்மாவிடம் தவம் செய்ய இடம் வேண்டினர் .அவர் இந்த தார்ப்பை எங்கு விழுகின்றதா அங்கு தவம் செய்க என்றார். 48000 முனிவர்கள் தவம் செய்த இடம் பெரிய சேரி மருவி பெருஞ்சேரி ஆனாது .
மும்மூர்த்திகள் வழிபட்ட சிவன் கோவில் -மூவலூர் (மார்க்கசகாயேஸ்வரர்)
தலபுராணம் :
தாரகாசுரன் மகன்கள் பிரம்மனே நோக்கி கடும் தவம் புரிந்தனர்.அதன் பயனாக பல வரங்களைப் பெற்றனர். அந்த வரத்தின் மூலம் தாருகாட்சகன் பொன்னாலான கோட்டையையும், கமலாட்சகன் வெள்ளிக் கோட்டையையும், வித்யுன்மாலி இரும்புக் கோட்டையையும், கட்டிக்கொண்டு ஆளுக்கொரு திசையில் வாழந்தனர்.நாட்கள் செல்ல செல்ல அசுரர்கள் மக்களை மற்றும் தேவர்களுக்கு இடையூறு செய்தனர்.சிவபெருமானிடம் வேண்ட அவர் நீங்கள் அனைவரும் சரி பாதி சக்தியை தந்தால் தான் அவர்களையும் கோட்டையையும் அழிக்க முடியும். அதன்படி தேவர்களின் சக்தி தேராகாவும் , பிரம்மா தேரோட்டியாகவும் , விஷ்ணு அம்புவின் தண்டடாகவும் , அக்னி அம்பின் நுனியாகவும் , வாயு அம்பின் மேலாகவும் செய்து , வில்லை சிவபெருமான் ஏந்த முடிவானது . விஷ்ணுவும் ,பிரம்மாவும் தம்முடைய சக்தி இல்லையெனில் சிவபெருமானால் அசுரர்களை அழிக்க இயலாது என எண்ணி கர்வம் கொள்ள , இதனை அறிந்த சிவபெருமான் பலமாக சிரித்தார். அந்த அந்த சிரிப்பே ஆயுதமாக மாறி ,அசுரர்களை அவர்களுது கோட்டையும் அழித்தது . யார் துணையும் இல்லாமல் அழித்தார்.
தவற்றை உணர்ந்த பிரம்மாவும் , விஷ்ணுவும் , ஈசனிடம் வேண்ட புன்னாகவனம் என்னும் இடத்திலுள்ள லிங்கத்தை வழிபடுக என்றார் .இருவரும் அந்த இடத்திற்கு வந்த போது வள்ளல் மயூரநாதர் வேடுவ வடிவம் கொண்டு லிங்கத்தை காட்டினார்.இருவரும் சேர்ந்து சிவபெருமானிடம் நீங்களே பூஜை செய்ய வழி காட்டுமாறு வேண்ட, ருத்ரனே லிங்கத்தே வழிபட்டார். மும்மூர்த்திகள் வழிபட்ட தலம் ஆதலால் மூவலூர் என அழைக்கபடுகிறது.
மஹிஷசுரனே அழித்த துர்க்கை தன்னுடைய கோர முகம் மாறவும் , இறைவனை திருமணம் செய்யவும் வழி பட்ட தலம் .இங்கு இரண்டு அம்மாள்கள் உள்ளனர். மங்களநாயகி , சவுந்திரநாயகி இங்குள்ள குரு தட்சிணாமூர்த்தியின் திருவடின் யானை முகம் மான் சிம்மம் ரிஷபம் முதலியவையும் முயலகன் சனகாதியர் நால்வர் ஆகியோருடன் சேர்ந்திருப்பது சிறப்பு .நாற்புறமும் நான்கு சிறிய நந்திகளும் அதன் முன்னால் ஒரு பெரிய நந்தியும் நடுவில் பலிபீடம் அமைந்து இருப்பது சிறப்பு.கோவில் கிழக்கு நோக்கியும் , மயூரநாதருக்கு வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது .ஆதி மார்க்க சகாயேசுவரரும் சன்னதியும் உண்டு.
இதய நோய் மற்றும் ஆயில்யம் நட்சத்திரம் பரிகாரத் தலம்
வள்ளலார் கோயில் -மயிலாடுதுறை
தல வரலாறு :
அம்பிகை மயில் வடிவம் கொண்டு செய்யும் பூஜையை காண சிவன்( நந்தி) பெருமாள் (கருடன்) , பிரம்மா (அன்னம்) , தேவர்கள் (குதிரை) வந்தனர்.ரிஷபம் வாகனம் முன்னே சென்று கொண்டு இருக்கும் போது, நம்மால் தான் சிவபெருமானால் வேகமாக செல்ல முடிகிறது என கர்வம் கொண்டது.மேதா தட்சிணாமூர்த்தி
குரு தோஷம் விலகும் கோவில் ,கண்ணுவ முனிவரின் மகளின் குரு தோஷம் விலகிய தலம் , சாமுண்டி வழிபட்ட தலம். வேலை கிடைக்கவும் , திருமணம் நடை பெறவும்.இங்குள்ள மேதா குருவிற்கு 11 வாரம் வியாழன் அர்ச்சனை செய்து வழிபடுகின்றன.விள நகர் துறை காட்டும். வள்ளல்
தலவரலாறு :
அருள்வித்தன் என்ற அந்தணன் ஒருவன் உச்சிவனேஸ்வரர் மீது அளவில்லாது பக்தி கொண்டு இருந்தான். அவர் தினமும் மலர் மாலை செய்து இறைவனுக்கு கொடுத்து வந்தான். அந்தணனின் பக்தியை சோதிக்க விரும்பிய ஈசன் , அவன் வரும் வழியில் உள்ள காவேரியில் வெள்ளம் வர செய்தார். அந்த அந்தணன் மனம் தளராது அந்த பூக்கூடையை பாதுகாத்து இறைவனிடம் வேண்ட , ஆற்றின் துறை (கரை) காட்டினார் எனவே இவர் துறை காட்டும். வள்ளல் என்று அழைக்கப்படுகிறரர். திருஞானசம்பந்தர் இத்தலம் வர , காவேரியில் வெள்ளம் கரை புரண்டு ஓட , இங்கு துறை காட்டுவர் யாரோவது உள்ளனரா எனக் கேட்க இத்தலத்து ஈசனே வேடுவன் வடிவம் கொண்டு துறை காட்டி மறைந்தார்.கோவில் அமைப்பு :
ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. சிவபெருமான் கிழக்கு நோக்கியும் ,மயூரநாதர் கோவிலுக்கு கிழக்கு நோக்கியும் உள்ளது . இறைவி வேயுறு தோளியம்மை சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருவதுடன் , நடராஜர் , நவகிரகங்கள் , முருகன் , பைரவர் உள்ளனர். சனி பகவான் வன்னி மரத்தின் அடியில் வீற்று இருக்கிறார்.பதிகம் பாடிய தலம் , இங்கு வந்து வழிபட்டால் பிறவி பெருங்கடலை சுலபமாக கடக்கலாம்.சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை
தல வரலாறு : மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள்...
-
தல வரலாறு: பெருஞ்சேரி : அதிக மக்கள் வாழும் இடத்தினை சேரி என்பர் ,48000 முனிவர்கள் பிரம்மாவிடம் தவம் செய்ய இடம் வேண்டினர் .அவர் இந்த தார்ப்ப...
-
தல வரலாறு : பிரம்மபுரீஸ்வரர் கோயில் மயிலாடுதுறைக்கருகிலுள்ள சித்தர்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இந்த தலத்தில் ...
-
தலவரலாறு : சோழ மன்னன் ஒருவன் திருக்கடையூர் கோவிலுக்கு நன்கொடை வழங்கி , புதுப்பித்து குடமுழுக்கு செய்யும் வரை , மந்திரியிடம் பார்த்து க...